முதலாளியைக் கொன்ற தம்பதியருக்கு 35 ஆண்டுகள் சிறை

2020 ஆம் ஆண்டில் வயதான முதலாளியைக் கொன்ற வழக்கில் இந்தோனேசிய தம்பதிக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செனாய், பாம் ரிசார்ட்டில் உள்ள வீட்டில் 73 வயதான லாவ் யென் நாவை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், தோட்டக்காரரான பார்டோலோமஸ் ஃபிரான்செடா மற்றும் அவரது மனைவி எகைலா, வீட்டுப் பணிப்பெண் ஆகியோருக்கு ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் இன்று தண்டனை விதித்தது.

பர்டோலோமியஸ்க்கு 12 பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டது. பெரித்தா ஹரியானின் கூற்றுப்படி, நீதிபதி ஹக்கிம் அபு பக்கர் கட்டார் தம்பதியரின் தண்டனை அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும் என்று கூறினார். நவம்பர் 29 அன்று, 23 வயதான பார்டோலோமியஸ் மற்றும் எகைலா இருவரும் மார்ச் 17, 2020 அன்று மதியம் லாவைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படியும் விதிக்கப்படும்.

வழக்கின் உண்மைகளின்படி, தம்பதியினர் லாவை ஓய்வெடுக்கும் போது  அடித்துக் கொன்றனர். அவர்கள் பாதிக்கப்பட்டவரின் சொகுசு MPV மற்றும் மொபைல் ஃபோனை எடுத்துக் கொண்டு, புதிய வேலைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒரு நண்பரைச் சந்திக்க கோலாலம்பூருக்குச் சென்றனர். பெட்டாலிங் ஜெயாவ டாமன்சாராவில் உள்ள ஒரு உணவகத்தில் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் ஓய் பென் லின் மற்றும் எஸ் செல்வி தம்பதியினரின் சார்பிலும் அரசுத் தரப்பில் துணை வழக்கறிஞர் சியாபிக் கசாலியும் ஆஜரானர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here