காதல் மோசடியில் ஓய்வுபெற்ற 74 வயது ஆசிரியை 225,000 ரிங்கிட்டை இழந்தார்

நாட்டில் வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், தனித்துவாழும் பெற்றோர் ஆகியோரைக் குறிவைத்து, பலவிதமான பொய்களைச் சொல்லி, அவர்களை காதல் மோசடியில் விழ வைத்து, அவர்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்யும் குற்றச்செயல் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் 74 வயதான ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரிடம் தன்னை கொரிய பிரபலம் லீ மின்-ஹோ போல் நடித்து, காதல் மோசடியில் சிக்க வைத்ததில், அந்த ஆசிரியை RM225k இழந்தார் என்று, மாச்சாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமட் அட்லி மாட் தாவூட் கூறினர்.

கடந்த ஆண்டு பேஸ்புக் மூலம் கொரிய ஸ்டாரின் அடையாளத்தைப் பயன்படுத்தி, மோசடி செய்பவர் ஆசிரியையை அணுகினார்.

அட்லியின் கூற்றுப்படி, இருவரும் பேஸ்புக் செயலியில் உள்ள ‘மெசஞ்சர்’ அம்சத்தின் மூலம் மட்டுமே அரட்டை அடித்து வந்தனர்.

“கடந்த அக்டோபரில், சந்தேக நபர் தனக்கு ஒரு ‘நீதிமன்ற வழக்கு’ நடந்துகொண்டிருக்கிறது என்றும், வழக்கை முடிக்க தனக்கு பெரும் தொகை தேவைப்படுவதாகவும் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தெரிவித்தார்.

தனக்குப் பிடித்த கே-பாப் நட்சத்திரத்தின் இக்கட்டான நிலையை கண்டு அனுதாபம் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், இரண்டு மாத கால இடைவெளியில் மொத்தம் RM225,000 ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றியதாக அட்லி தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமாக 74 வயதான அப்பெண்மணி, பணத்தை பரிமாற்றம் செய்த பின்னரே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

“பாதிக்கப்பட்டவர் பின்னர் மச்சாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் புகார் செய்தார்” என்றார்.

இந்த வழக்கு மோசடி செய்ததற்காக தண்டனைச் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here