நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகருகின்றன

கோலாலம்பூர்:

நாளைய கிறிஸ்துமஸ் தினக்கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று மாலை 5 மணி நிலவரப்படி சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதால் முக்கிய மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து மெதுவாக நகர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தலைநகருக்கு வெளியே செல்லும் முக்கிய சாலைகளில் அசாதாரண நெரிசல் எதுவும் இல்லை என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கெரோவிலிருந்து சிம்பாங் அம்பாட் வரை பல இடங்களில் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது என்றார்.

மேலும் கோல கங்சாரில் இருந்து சுங்கை பேராக் மற்றும் செனவாங்கிலிருந்து போர்ட்டிக்சன் வரை வடக்கு நோக்கி மெதுவாக நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here