விமான நிலையத்தில் நெரிசலா? குடிநுழைவுத் துறை மறுப்பு

புத்ராஜெயா: விமான நிலையத்தில் நெரிசல் இருப்பதாகக் கூறப்படும்  வைரலான காணொளி, ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் (BSI)  கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பழைய காணொளி என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையால் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் குறித்த காணொளி இது இல்லை என்று மறுத்துள்ளார். கோவிட்-19 காரணமாக எல்லை தாண்டிச் செல்வதற்கான கட்டுப்பாடு முடிவடைந்த பின்னர், வைரலான காணொளி கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் அப்பாதையை கடந்து செல்லும் போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்று கூறிய அவர், அந்த  அந்நாட்டின் அனைத்துலக விமான நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை என்று மறுத்தார். பதிவுகளை மேற்கோள் காட்டி, BSI இல் சராசரியாக வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் இயக்கம் சாதாரண நாட்களில் 250,000 என்றும் பண்டிகை காலங்களில் இரட்டிப்பாகும் என்றும் கூறினார்.

சமூகத்தில் குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்பதால், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here