வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தீ விபத்து; சரவாக்கில் மொத்தம் 12,470 பேர் துயர்துடைப்பு மையங்களுக்கு இடமாற்றம்

கூச்சிங்:

ன்று (பிப்ரவரி 1) காலை 7 மணி நிலவரப்படி, சரவாக்கில் 3,618 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,470 பேர் அங்குள்ள 62 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இந்த மொத்த எண்ணிக்கையில் 3,570 குடும்பங்களைச் சேர்ந்த 12,264 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று, சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (JPBN) செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மேலும் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட 39 குடும்பங்களைச் சேர்ந்த 169 பேர், அங்குள்ள 3 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஒரு நீண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 37 பேர் அங்குள்ள 1 தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர் என்றார்.

இதற்கிடையில், இன்று சரவாக்கின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here