பினாங்கில் நீர் விநியோகம் வழக்கத்துக்கு திரும்பியது – சோவ்

ஜார்ஜ் டவுன்:

சுங்கை பிறையில் குழாய் வெடித்ததால் பாதிக்கப்பட்ட நீர் விநியோகம் முழுமையாக சீரடைந்துள்ளதாக சோவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 18 முதல் நீர்க்குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தநிலையில், நேற்று சுமார் 200,000 நுகர்வோரில் 97% விழுக்காட்டினருக்கு நீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்பியதாக பினாங்கு முதல்வர் நேற்று தெரிவித்தார்.

மேலும் தென்மேற்கு மாவட்டத்தில் உள்ள 11 பகுதிகளில் மீதமுள்ள 9,760 நுகர்வோருக்கு நேற்று மாலைக்குள் தண்ணீர் கிடைத்துவிடும் எனவும் அவர் கூறினார் .

முன்னதாக சுங்கை பிறையில் 1.35 மீ அகலமுள்ள குழாயின் அடிப்பகுதியில் ஒரு பகுதி வெடித்ததை அடுத்து, தீவின் தென்மேற்கு மாவட்டம் மற்றும் செபெராங் பிறை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டதாக கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here