கோத்தா பாரு:
கிளந்தானில் வெள்ளநிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நேற்றைய தினம் 17,378 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 21,380 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, தும்பாட், பாசீர் மாஸ், தானா மேரா, கோலக் கிராய் மற்றும் குவா மூசாங் ஆகிய ஐந்து இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 6,918 குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் 68 தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்றும் அது மேலும் தெரிவித்த்துள்ளது.