வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தும் வழக்கில் அதிகமான மலேசியர்கள் கைதாகி உள்ளனர்

கோலாலம்பூர்: வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மொத்தம் 28 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று  டத்தோஸ்ரீ முகமட் கமாருடின்  கூறுகிறார். புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (என்சிஐடி) இயக்குநர், 17 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பு என்றார்.

2021 ஆம் ஆண்டில், 32 மலேசியர்கள் போதைப்பொருள் கடத்துபவர்கள் என்று தடுத்து வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வெளிநாடுகளின் பல்வேறு நுழைவு இடங்களில் கைது செய்யப்பட்டனர் என்று அவர் வியாழக்கிழமை (டிசம்பர் 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கு கும்பல் இவர்களை பயன்படுத்தியதாக முகமட் கமாருடின் கூறினார்.

ஒவ்வொரு போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும் RM5,000 முதல் RM10,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்கள் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

நிலைமை கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகவும் அதிக வருமானத்தை அளிக்கும் எந்தவொரு சலுகையாலும் எளிதில் ஏமாறாமல் மலேசியர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிக ஊதியம் வழங்குவது உட்பட, போதைப்பொருள் கடத்துவதற்கு மக்களை கவர்ந்திழுக்கும் தந்திரங்களை கும்பல் பயன்படுத்துகிறது. இலவச விடுமுறை அல்லது அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டுப் பணி உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான சலுகைகள் குறித்த தகவல் உள்ளவர்கள், NCID ஹாட்லைனை 012-2087222 என்ற எண்ணில் விரைந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here