கோலாலம்பூர்:
நாட்டின் ஆறு மாநிலங்கள், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயா ஆகிய இடங்களில் இன்று இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மோசமான வானிலையை லிப்பிஸ், ஜெரான்துட், தெமெர்லோ மற்றும் பகாங்கின் மாரான் ஆகிய இடங்களும் எதிர்கொள்ளும் என்று அது இன்று X சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் சிலாங்கூரில் கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, கோலா லங்காட், கோல சிலாங்கூர் மற்றும் சிப்பாங் ஆகிய இடங்களும், நெகிரி செம்பிலானில் சிரம்பான் மற்றும் போட்டிக்சன் ஆகிய இடங்களும் இந்த காலநிலையை எதிர்கொள்ளும் என்றும் அது தெரிவித்துள்ளது.
அத்தோடு ஜோகூரைப் பொறுத்தவரை, குளுவாங், மெர்சிங்,பொந்தியான், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகியவையும் இடியுடன் கூடிய மழையை பெறும்.
சரவாக்கின் சமரஹான், பெடோங், சரிகேய், சிபு, முக்கா, கபிட், பிந்துலு, நீர் மற்றும் லிம்பாங்கும், சபாவில் சிபிதாங், நபவான், பெனாம்பாங், கோத்தா கினாபாலு, ரானாவ், சண்டாக்கான் ஆகிய இடங்களும் இந்த வானிலையை எதிர்கொள்ளும் என்றும் மெட்மலேசியா அறிவித்துள்ளது.








