ஜாலான் கோத்தா திங்கி-மெர்சிங், ஜாலான் ஜோகூர் பாரு-என்டாவ் ஆகிய சாலைகள் மூடப்பட்டுள்ளன

ஜோகூர்:

ன்று காலை 8 மணி முதல், ஜாலான் கோத்தா திங்கி – மெர்சிங் சாலையில் 34 ஆவது கிலோமீட்டர் அதாவது RISDA ஆயில் பாம் மில் அருகே உள்ள சாலை அனைத்து வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து அம்பாட் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்று, மெர்சிங் மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் அப்துல் ரசாக் அப்துல்லா சானி கூறினார்.

“100 மீட்டர் நீளமுள்ள சாலையில் 0.3 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது, மேலும் அப்பகுதியில் வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அசம்பாவிதங்கள் எருவும் நடக்காமல் இருக்க அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு கீழ்ப்படியுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் சொன்னார்.

“மேலும் உதவி தேவைப்படுபவர்கள், 07-7993507 என்ற எண்ணில் மெர்சிங் IPD கட்டுப்பாட்டு மையத்தை (DCC) அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், கோத்தா திங்கி-மெர்சிங் சாலையைத் தவிர, ஜோகூர் பாரு-எண்டவ் சாலையும் 100 மீட்டர் நீளத்திற்கு வெள்ளத்தில் மூழ்கியதால், அனைத்து வகையான வாகனங்களும் மூடப்பட்டுள்ளது என்று மெர்சிங் பொதுப்பணித் துறை ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

எனவே சாலைப் பயனர்கள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறும் அது மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here