ஜோகூர், ஸ்கூடாயிலுள்ள கடைவீட்டுத் தொகுதியில் நடந்த சோதனையில் 28 ஆவணமற்ற வெளிநாட்டவர்கள் கைது

ஜோகூர் பாரு:

ஸ்கூடாயில் உள்ள பல கடைவீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 11 வயது சிறுவன் உட்பட மொத்தம் 28 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை (ஜனவரி 3) நள்ளிரவு 12.50 மணியளவில், Ops Sapu என்ற குறியீட்டுப் பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவு இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், செல்லுபடியாகும் அனுமதி அல்லது நாட்டில் தங்குவதற்கு விசா இல்லாத வெளிநாட்டவர்களின் வீடுகள் என நம்பப்படும் பல இடங்களில் சோதனை நடத்தினோம்.

அதன்மூலம் மியன்மார், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 28 சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பெண்கள், 20 ஆண்கள் மற்றும் 11 வயரு சிறுவன் ஆகியோர் அடங்குவர். அவர்கள் 11 முதல் 56 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

“அவர்கள் தங்கியிருந்த வளாகத்தில் சிறிய அறைகள் மற்றும் ஏனைய அறைகள் RM450 முதல் RM750 வரை மாத வாடகைக்கு எடுத்தனர்,” என்று அவர் இன்று (ஜனவரி 3) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

எந்தவொரு செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தவறியதற்காக குடிவரவுச் சட்டம் 1959/63 (சட்டம் 115) மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் தகவல் இருந்து, அவற்றை மறைத்தால் அத்தகைய நபர்கள் மீது துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் பஹாருதீன் பொதுமக்களுக்கு வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here