சிரம்பான்:
குடியுரிமை பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டாக பள்ளிக்கு செல்ல முடியாது மனஉழைச்சலுக்குள்ளான 10 வயது ஷிவானியின் கவலை, பிரதமருக்கு எழுதிய கடிதத்தால் முடிவுக்கு வந்துள்ளது.
தனது மகளின் பள்ளிப் படிப்பில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதில் அக்கறை காட்டிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சகத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாக அவரது தந்தை பி.ராஜேஸ்வரன், 44, கூறினார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரன் மேலும் கூறுகையில், இதற்குப் பிறகு, தனது மகளுக்கு மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிசெய்ய தேசிய சமூக நல அமைப்பின் உதவியுடன் தனது மகனின் குடியுரிமை ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
“ஷிவானி முன்பு ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படித்துள்ளார், ஆனால் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்ல முடியாமல் போனது. காரணம் ஷிவானியின் பெற்றோர் பதிவுத்திருமணம் செய்துகொள்ளவில்லை. அத்தோடு ஷிவானிக்கு பிறப்பு பத்திரமும் எடுக்கவில்லை. மேலும் ஷிவானியின் பெற்றோர் கடந்த 2023 இல் பிரிந்துவிட்டனர். இதனால் ஷிவானி நாடற்றவர் என வகைப்படுத்தப்பட்டால் கல்வியை தொடர முடியாமல் போனதாக நம்பப்படுகிறது.
செனாவாங்கில் உள்ள தாமான் ஸ்ரீ பாகி தேசியப் பள்ளியின் மாணவியான ஷிவானி, இந்த மார்ச் மாதத்தில் தனது நண்பர்களையும் ஆசிரியர்களையும் மீண்டும் பள்ளியில் சந்திக்க முடிந்ததில் மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும், இதற்காகந்தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
முன்னதாக, ஷிவானி தனது கல்வியைத் தொடர அனுமதிக்குமாறு உதவி கேட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.














