பட்டர்வொர்த்:
நேற்று முதல் நீர் விநியோகத் தடை அமலில் இருக்கும் பினாங்கு மாநிலத்தில், 30 மணி நேரத்திற்குள் சுமார் 350,000 அல்லது 60 விழுக்காடு நுகர்வோருக்கு நீர் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
“சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு பெரிய வால்வுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்று துணை எரிசக்தி மாற்றம் மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் இன்று (ஜன. 11) அங்கு நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
சுங்கை பிறையில் பணிகள் 50 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும், பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) விரைந்து இதனை சரிசெய்யும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் திட்டமிட்டதை விட முன்னதாகவே மாநிலத்தில் பல பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை சீர்செய்ததற்காகவும் , திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே பணிகளை முடித்ததற்காகவும் பினாங்கு நீர் வழங்கல் கழகத்தை அவர் பாராட்டினார்.









