முறையான பணி அனுமதியின்றி பாதுகாப்புக் காவலர்களாகப் பணிபுரிந்ததாக 10 வெளிநாட்டினர் கைது

கோலாலம்பூர்:

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஏழு இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையில், சரியான பணி அனுமதியின்றி பாதுகாப்புக் காவலர்களாகப் பணிபுரிந்ததாக சந்தேகிக்கப்படும் 10 வெளிநாட்டினரை உள்துறை அமைச்சகம் (KDN) தடுத்து வைத்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவினர் குடிநுழைவு திணைக்களத்துடன் இணைந்து கடந்த புதன்கிழமை இந்தக் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக KDN அமலாக்க மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு செயலாளர் நிக் யுசைமி யூசூப் தெரிவித்தார்.

“தடுத்துவைக்கப்பட்ட நபர்கள் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்,” என்று அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

இந்த நடவடிக்கை சட்ட மீறலில் ஈடுபட்ட நான்கு பாதுகாப்புக் காவலர் சேவை வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கையும் அம்பலப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த வழக்கு குடிநுழைவு சட்டம் 1959/63 இன் பிரிவு 39(b) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, இது பாஸ் அல்லது அனுமதி நிபந்தனைகளை மீறுவது தொடர்பானது என்றும் RM10,000 அபராதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

“எனவே, பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்புக் காவலர் சேவைகளை நாடுபவர்கள் நிறுவனம் KDN இல் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.

03-80008000/88893145 என்ற ஹாட்லைன் மூலமாகவோ, [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது www.moha.gov.my.–Bernama என்ற இணையதளத்தின் மூலமாகவோ சட்டவிரோத பாதுகாப்புக் காவலர்கள் தொடர்பான தகவல்களை வழங்கி தமக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here