வெள்ளம்: காலை 6 மணி நிலவரப்படி மூன்று மாநிலங்களில் 455 பேர் இன்னமும் நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்

ஜோகூர் பாரு:

ன்று காலை 6 மணி நிலவரப்படி, ஜோகூரின் 2 மாவட்டங்களில் 20 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 78 பேர் இன்னும் அங்குள்ள 3 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

மாநிலத்தில் வெள்ள நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருவதால், நிவாரண மையங்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் என்று NADMAவின் தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள நாட்டின் பேரிடர் நிலை குறித்த சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகாங்கில், ரொம்பின் மாவட்டத்தில் மட்டும் 34 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 103 பேர் இன்னும் அங்குள்ள ஒரு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் சபாவின் இரு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்துள்ளது. அங்கு 83 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 284 பேர் இன்னும் அங்குள்ள ஒரு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here