டத்தோ முத்துவுக்கு விருது 

 

கோலாலம்பூர், ஜன. 18-

அண்மையில் நடைபெற்ற மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளன விருது விழாவில் அதன் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்துவுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தலைநகரில் நடைபெற்ற இந்த விருது விழாவிற்கு இளைஞர் – விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தலைமையேற்றார். சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஷஹிடான் காசிம் தலைமையில் இந்த விருது  நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதில் மலேசிய ஓட்டப்பந்தய சம்மேளனம் மட்டுமன்றி சிலாங்கூர் ஓட்டப்பந்தய சங்க முன்னாள் தலைவருமான டத்தோ எஸ்.எம். முத்துவுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில், கடந்த காலங்களில் என் மீது பல்வேறு குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும் என் சேவைக்குக் கிடைக்க அங்கீகாரமாக நான் இந்த விருதைக் கருதுகிறேன் என  குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here