சோதனையில் இருந்து தப்பிக்க சாலைத் தடுப்பில் மோதிய கார்; JPJ அதிகாரி காயம்

கோத்தா பாரு:

ஜாலான் கோலக்கிராய்-கோத்தா பாருவில் நேற்று இரவு சாலைத் தடுப்பு சோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற கார் மோதியதில் சாலைப் போக்குவரத்துத் துறை அமலாக்க அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

நேற்றிரவு 9 மணியளவில், அகாடமி JPJ விலாயா தைமூர் அருகே “Ops Pengarah JPJ Kelantan” சாலைத் தடுப்பை நிர்வகிக்கும் போது, கார் மோதியதில் முகமட் அஸ்ரின் அப்துல் வஹாப், 43, அவரது கைகள் மற்றும் கால்களில் காயம் அடைந்ததாக கிளந்தான் JPJ இயக்குனர் முகமட் மிசுவாரி அப்துல்லா கூறினார்.

“பதிவு எண்ணின் அடிப்படையில் கார் உரிமையாளரை நாங்கள் கண்டறிந்துள்ளோம், இதுதொடர்பில் நாங்கள் போலீஸ் புகாரை தாக்கல் செய்வோம் என்றும், காவல்துறையின் உதவியுடன் அவரை கைது செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்வோம்,” என்று, நேற்றைய நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here