பூலாவ் ஜாராக்கில் 22 வெளிநாட்டு மீனவர்களுடன் படகு தடுத்து வைப்பு

ஈப்போ:

ல்வேறு குற்றங்களைச் செய்ததற்காக 22 வெளிநாட்டு மீனவர்களை பூலாவ் ஜாராக்கிலிருந்து தென்கிழக்கே 0.98 கடல் மைல் தொலைவில் வைத்து, பேராக் மலேசிய கடல்சார் அமலாக்க துறை வெள்ளிக்கிழமை கைது செய்தது.

பேராக் கடற்பரப்பில் ‘Op Sayong’, ‘Op Tanjung’ மற்றும் ‘Op Tiris’ ஆகிய நடவடிக்கைகளின் மூலம், வழக்கமான ரோந்துப் பணி ஈடுபட்டிருந்தபோது, காலை 10.40 மணியளவில் குறித்த வெளிநாட்டவர்களுடன் படகு காணப்பட்டதாக அதன் இயக்குநர் கேப்டன் மரிடைம் முகமட் ஹம்பலி யாக்கோப் தெரிவித்தார்.

24 முதல் 57 வயதுடைய நான்கு தாய்லாந்து பணியாளர்கள் மற்றும் 17 கம்போடிய பணியாளர்களுடன் தாய்லாந்து கேப்டன் ஒருவரால் குறித்த படகு இயக்கப்பட்டது என்றும் அவர்களிடம் சரியான அடையாள ஆவணங்கள் இருந்ததை சோதனையில் கண்டறிந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குறித்த படகை சோதனையிட்டதில் சுமார் 60 லிட்டர் கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் திரவம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வழக்கு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டம் 1998, ரேடார் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெறவில்லை என்பதற்காகவும், கடற்கரையிலிருந்து 15 கடல் மைல்களுக்கு குறைவாக மீன்பிடித்ததற்காக மீன்பிடிச் சட்டம் 1985ன் கீழும் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

“மேலும், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களை தவறாகப் பயன்படுத்தியதால், விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் கீழ் வழக்கும் விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

“குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு RM10,000 க்கு மிகாமல் அபராதம் அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here