கனமழை; ஈப்போவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

ஈப்போ :

நேற்றுப்பெய்த கனமழையைத் தொடர்ந்து ஈப்போ நகரின் பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளாக ஃபேர் பார்க், ஜாலான் கோலா கங்சார், ஜாலான் லாஹாட் மற்றும் தாமான் செம்பகா ஆகியவை அடங்கும் என்று சோதனையில் கண்டறியப்பட்டது.

அத்தோடு வெள்ளம் காரணமாக பல கார்கள் சாலையின் நடுவில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படுகிறது, அதன்காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உறவுக்கு அழைக்கப்பட்டனர் என்று, மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மைய அதிகாரி சைபுல் ரிசான் சுலைமான் கூறினார்.

நேற்று மாலை 5 மணியளவில் திடீர் வெள்ளம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது என்றும், நீர் மட்டம் 0.9 மீ முதல் 1.5 மீ உயரம் வரை இருந்தது என்றும் அவர் சொன்னார்.

“சாலையில் உள்ள கடைகள் மற்றும் கார்களுக்குள் சுமார் 36 பேர் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும் இரவு 7.30 மணி நிலவரப்படி, வெள்ளம் குறைந்துவிட்டது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here