முதலீட்டு மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 11 பேர் பேராக் போலீசாரால் கைது

ஈப்போ:

கடந்த 20ஆம் தேதி ஈப்போவிலுள்ள ஒரு ஹோட்டலில் நடத்திய சோதனையில் கிரிப்டோகரன்சி முதலீட்டு மோசடியில் தொடர்புடைய 11 சந்தேக நபர்களை ஈப்போ போலீசார் வெற்றிகரமாகக் கைது செய்தனர்.

குறித்த கும்பல் ஒரு கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனத்தை ஊக்குவிக்கும் கருத்தரங்கை ஏற்பாடு செய்து, 55 பேர் கொண்ட பங்கேற்பாளர்களை குறிவைத்து, முதலீடு செய்யப்பட்ட மூலதனத்தின் அடிப்படையில் தினசரி வருமானம் 0.5% முதல் 2.2% வரை இருக்கும் எனக்கூறி அவர்களை ஒருங்கிணைத்ததாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமட் யூசுஃப் கூறினார்.

சந்தேக நபர்களில் ஏழு உள்ளூர் ஆண்கள், இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டு ஆண்கள் மற்றும் இரண்டு உள்ளூர் பெண்கள் அடங்குவர் என்றும் அவர் கூறினார்.

மேலும் இந்தக் கும்பல் “D’Luxe” என்ற பெயரில் இயங்கியது என்றும், முதலீட்டாளர்களை ஏமாற்ற ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) ரோபோ அமைப்புக்கொண்ட இணையத் தளத்தை பயன்படுத்தியது என்றும் அவர் கூறினார்.

அத்தோடு இந்த ஒன்று கூடலில் கலந்துகொண்டவர்கள் கிரிப்டோகரன்சி வர்த்தகம் பற்றி எந்த அறிமுகமில்லாதவர்கள் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் 40 முதல் 60 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகளாவர்.

மேலும் அவர்கள் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் AI டிரேடிங் பாட் ஆன்லைன் தளம் உண்மையில் முதலீட்டாளர்களை ஏமாற்றும் ஒரு பொறி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை,” என்றும் அவர் நேற்று (ஜனவரி 24) நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

சந்தேகநபர்கள் மறு அறிவித்தல் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here