குவாந்தான்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, சுங்கை லெம்பிங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 202 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 468 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் SMK சுங்கை லெம்பிங்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பகாங் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 131 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 305 பேர் குறித்த நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதற்கிடையில், காலை 8.45 மணி நிலவரப்படி, பகாங்கில் ஐந்து ஆறுகள் அபாய அளவைத் தாண்டியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.









