குவாந்தான்:
தெமெர்லோ, இராணுவ முகாமில் உள்ள குளத்தில் நீந்திய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று மாலை 5.55 மணியளவில் ஏழு அடி (2.1 மீட்டர்) ஆழமான குளத்தில் சிறுவர்கள் மூழ்கியது குறித்து தங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது என்று பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் வான் முகமட் ஜைடி வான் இசா கூறினார்.
“11 வயதுடைய இருவர் மற்றும் 13 வயதுடைய ஒரு சிறுவன் உட்பட பாதிக்கப்பட்ட மூவரும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு இராணுவ ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் ஆனால் மருத்துவ அதிகாரிகளால் அவர்கள் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“அப்போது மேலும் ஒரு சிறுவனைக் காணவில்லை என்று தீயணைப்பு வீரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, எனவே அவர்கள் குளத்தில் தேடுதல் பணியைத் தொடர்ந்தனர்,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் இராணுவ வீரர்களின் உதவியுடன் குளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றியதுடன், காணாமல்போன சிறுவனை பாதுகாப்பாக மீட்டு அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர் என்று வான் முகமட் ஜைதி மேலும் கூறினார்.









