1.7 டன் கெத்தும் இலைகள் கடத்தும் முயற்சி முறியடிப்பு

அலோர் ஸ்டார்:

1.7 டன் கெத்தும் இலைகளைக் கடத்தும் முயற்சியை மலேசிய ஆயுதப் படை (ATM) தாய்லாந்து – மலேசிய எல்லையில் முறியடித்துள்ளனர்.

நேற்றுக்காலை 7.15 மணியளவில், இரு நாட்டிற்குமிடையிலான எல்லை அருகிலுள்ள வனப் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் கடத்தப்பட இருந்ததாக நம்பப்படும் கெத்தும் இலைகளை பறிமுதல் செய்ததாக மலேசிய காலாட்படையின் (2 பிரிவு) இரண்டாம் பிரிவின் தலைமையகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் விடப்பட்ட நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டதில் இந்தக்குட்டு வெளிப்பட்டது.

“விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வாகனத்தில் மொத்தம் 1,740 கிலோகிராம் எடையும் RM52,200 மதிப்பிலான கெத்தும் இலைகள் அடங்கிய 116 பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

கைப்பற்றப்பட்ட அனைத்து பொட்டலங்களும் வாகனமும் மேலதிக நடவடிக்கைக்காக கோலாநெராங் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here