கோலாலம்பூர்:
நாட்டின் கிழக்கு பகுதிகளில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கன மழை மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழையும் பலத்த காற்றும் நீண்ட நாட்களுக்கு கிழக்கு மலேசியா பகுதியில் இருக்கும் என்று அதன் தலைமை இயக்குநர் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறினார்.
இந்தக் காலப்பகுதியில் கடல் அலைகள் பெருமளவில் உயரும் சாத்தியமும் இருப்பதாகவும் வானிலை ஆய்வு துறை எச்சரித்துள்ளது.
வானிலை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார் என்று ஹெல்மி சொன்னார்.








