ஜோகூர் ரஹ்மா விற்பனை திட்டம்; இந்தாண்டு RM8 மில்லியனுக்கும் அதிகமாக ஒதுக்கீடு

ஜோகூர் பாரு:

இந்த ஆண்டு ஜோகூரில் Jualan Rahmah (JR) நிகழ்ச்சியை நடத்த உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தால் RM8 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் KPDN இயக்குனர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னொமோ கூறுகையில், மாநிலத்தில் உள்ள 26 நாடாளுமன்ற இடங்களிலும் இந்த ஆண்டு 602 ரஹ்மா விற்பனைத் திட்டங்களை நடத்த இலக்கு வைத்துள்ளதுள்ளது என்றார்.

இந்த ஆண்டு ஜனவரியில் 26 Jualan Rahmah வுடன் தொடங்கினோம், பெப்ரவரியில், 26 நாடாளுமன்ற இடங்களிலும் 52 நிகழ்ச்சிகளை இரட்டிப்பாக்க நடத்த திட்டமிட்டுள்ளோம்.

“இந்த ஆண்டு, நடமாடும் Jualan Rahmah (JR) நிகழ்ச்சிகளை நடத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்றுன்; நகர்ப்புற Jualan Rahmah (JR) உடன் ஒப்பிடும்போது இதுபோன்ற நடமாடும் திட்டங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்று, கடந்த ஆண்டு நாங்கள் பெற்ற பின்னூட்டத்தின் அடிப்படையில் கண்டறிந்தோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here