இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கி 2 ஆசிரியர்களுக்கு சுமார் RM150,000 இழப்பு

குவாந்தான்:

தபால் நிலைய அதிகாரி எனக்கூறும் ஒருவரிடமிருந்து அழைப்பைப் பெற்ற இரு ஆசிரியர்கள், இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கு சமூக ஊடக இணைப்பைக் கிளிக் செய்ததால் மொத்தம் RM158,176 இழந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அலோர் ஸ்டார் தபால் நிலைய அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சந்தேக நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்ற 54 வயது பெண் ஆசிரியை, முதலில் குறித்த மோசடியில் சிக்கியதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் பெயரில் சிம் கார்டு, காசோலை புத்தகம் மற்றும் ஃபிளாஷ் டிரைவ் ஆகியவை தபாலில் வந்ததாகவும், அதற்கு உரிமைகோருமாறு சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம் கூறினார்.

ஆனால் “பாதிக்கப்பட்டவர் அதை மறுத்தார், உடனே அந்த அழைப்பு ஒரு போலீஸ் அதிகாரி என கூறப்பட்ட ஒருவருடன் இணைக்கப்பட்டது, அந்த போலீஸ்காரர் பணமோசடி மற்றும் போதைப்பொருள் விற்பனை வழக்கில் பாதிக்கப்பட்டவர் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட வேண்டுமாயின் அவர்களுக்கு பணம் செலுத்துமாறு கூறியதால், மோசடிக் கும்பலாலவ கொடுக்கப்பட்ட  வங்கி கணக்கிற்கு இருவரும் பணத்தை மாற்றினர். பின்னர் குறித்த நபரை தொடர்புகொள்ள முடியாது போனதும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்தார்கள் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here