ஈப்போ:
பீடோர் குடிநுழைவு தடுப்பு மையத்தில் இருந்து தப்பிய மேலும் ஏழு ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் மீண்டும் பிடிபட்டுள்ளனர்.
புதன்கிழமை (பிப்ரவரி 7) பிற்பகல் 3 மணியளவில் ஜாலான் கச்சு, தாப்பாவில் உள்ள ஃபெல்க்ரா தோட்டத்தில் ஏழு ரோஹிங்கியாக்கள் பிடிபட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் ஆணையர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.
குறித்த முகாமிலிருந்து தப்பியோடியவர்களில் இதுவரை 98 பேரை நாங்கள் மீண்டும் கைது செய்துள்ளோம்.
“போலீசார் 73 பேரையும், குடிநுழைவுத் துறையினர் 25 பேரையும் பிடித்தனர்.
“இப்போது 31 பேர் மட்டுமே ஒளிந்துள்ளனர்,” என்று அவர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தப்பியோடிய கைதிகளைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் தாப்பா காவல்துறைக்கு 05-401 1222 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு” அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.







