அம்பாங்: பாண்டான் பெர்டானாவில் உள்ள தாசேக் பாண்டான் லேக் வியூவில் நிர்வாண பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 11) காலை 8.13 மணியளவில் அந்தப் பெண் நிர்வாணமாக ஏரிக்குள் குதித்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் கமால் முகமட் அசாம் இஸ்மாயில் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் முதலில் பார்க்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) வெளியிட்ட அறிக்கையில், சம்பவ இடத்தில் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறினார்.








