சாலை வன்முறை: சிங்கப்பூர் காரின் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு

ஜோகூர்:

சாலையில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் பதிவு எண்ணைக் கொண்ட காரின் ஓட்டுநரை ஜோகூர் மாநிலக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாட்டின் வடக்கு-கிழக்கு நெடுஞ்ச்சாலையில் வடக்கே சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 10) பிற்பகல் 2.36 மணிக்கு சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்டதாக ஜோகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் எம். குமார் தெரிவித்தார்.

இச்சம்பவம் பதிவானதாகக் கருதப்படும் 54 வினாடிக் காணொளியை ஃபேஸ்புக் பயனர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். அந்தக் காணொளி குறைந்தது 26,000 முறை பார்க்கப்பட்டதுடன், 3,000 முறை பகிரப்பட்டது. மேலும் அப்பதிவுக்கு 694 கருத்துகள் பதிவிடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here