47 புள்ளிகளுடன் டோட்டன்ஹம்

பிரைட்டன் அணியுடனான இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தில் டோட்டன்ஹம் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் டோட்டன்ஹம் அணி அரங்கில் நடைபெற்றது.

அதன் 17ஆவது நிமிடத்தில் பிரைட்டன் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி குரோப் எனும் ஆட்டக்காரர் கோல் புகுத்தினார்.

முதல் பாதி நேரம் 0-1 என்ற கோல் கணக்கில் முடிவுற்ற நிலையில் 61ஆவது நிமிடத்தில் சார் டோட்டன்ஹம் அணிக்கான கோலை புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.

இதனையடுத்து கோல் புகுத்த இரு அணிகளும் பல முயற்சிகளை மேற்கொண்டன. ஆட்டம் முடிவடையும் தறுவாயில் ஜோன்சன் டோட்டன்ஹம் அணிக்கான 2ஆவது கோலை புகுத்தி அவ்வணியின் வெற்றியை உறுதி செய்தார்.

டோட்டன்ஹம் அணி தற்போது பிரிமியர் லீக் பட்டியலில் 47 புள்ளிகளை வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here