கோலாலம்பூர்:
பதின்மூன்று வருடங்கள் பழமையான வழக்குகளின் சான்றுப் பொருட்கள், அதாவது அவ்வழக்கின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அப்புறப்படுத்தப்பட்டன.

2010 முதல் 2023 வரையிலான வழக்குகளில் இருந்து 429 புலனாய்வுத் தாள்களில் இருந்து 42,408 பொருட்களை உள்ளடக்கியவை என்று, இன்று (பிப்ரவரி 15) ஆலாம் டாமாய் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜிட் கூறினார்.

டாங் வாங்கி, செராஸ், வாங்சா மாஜு, பிரிக்ஃபீல்ட்ஸ் மற்றும் செந்தூல் ஆகிய மாவட்டங்களிலுள்ள காவல் நிலையங்களின் உறுப்பினர்களால் குறித்த சான்றுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு RM2.898 மில்லியன் என்றும், இதில் RM24,106.45 ரொக்கபணமும் இருந்தது என்றும் அவர் கூறினார்.









