பெட்டாலிங் ஜெயா:
கடந்த ஆண்டு காசநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.47 விழுக்காடு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மொத்தம் 26,781 பேருக்குக் காசநோய் ஏற்பட்டது.
இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 25,391 பேராகவுன் 2021ஆம் ஆண்டில் 21,727 பேராகவும் பதிவாகியது.
காசநோயால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் காணத் தேவையான நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சகம் தீவிரம் காட்டுவதாக அது தெரிவித்துள்ளது.
மேலும் அமைச்சகத்தால் நடைமுறைப்படுத்தியுள்ள உத்திகளின் விளைவாக காசநோயால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
“காசநோய் பரவலைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும், காசநோய் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,” என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.