ஈப்போவில் போதைப்பொருள் விநியோகித்த குற்றச்சாட்டிலிருந்து எஸ்.ராஜா விடுவிப்பு

ஈப்போ :

போதைப்பொருள் வைத்திருந்தது மற்றும் விநியோகித்தது தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்து இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் இன்று உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.ராஜா (45) மீதான வழக்கை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதைக் கண்டறிந்த நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குர்சரண் சிங் ப்ரீத், இந்த தீர்ப்பினை வழங்கினார்.

மேலும், போலீஸ் விசாரணை முழுமையாக இல்லை என்றும், சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(a) இன் கீழ் சாட்டப்பட்ட முதல் குற்றச்சாட்டில், நவம்பர் 22, 2020 அன்று இரவு 8 மணியளவில் இங்குள்ள தாமான் மாஸ் ஃபாலிமில் உள்ள ஒரு வீட்டின் அறையில் ராஜா 76.68 கிராம் மெத்தாம்பேட்டமைனை விநியோகித்ததாகக் கூறப்பட்டது.

விஷம் சட்டம் 1952 இன் பிரிவு 30(3) இன் கீழ் இரண்டாவது குற்றச்சாட்டிற்காக, benzodiazepine class இல் உள்ள nitrazepam 4.14 கிராம் போதைப்பொருளை அதே இடத்தில் அதே தேதி மற்றும் நேரத்தில் வைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

கிஷோர் குமார் என்ற மற்றொரு நபர் அந்த வீட்டில் ஒரு இரவைக் கழித்திருப்பதும் அரசுத் தரப்பு வாதத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நீதிபதி பூபிந்தர் கூறினார்.

ராஜாவின் வழக்கறிஞர் ஜே. மேத்யூஸை நீதிமன்றத்திற்கு வெளியே சந்தித்தபோது, கிஷோர் என்ற மற்றைய நபர் 39b (ஆபத்தான போதைப்பொருள் சட்டம்) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக எனக்கு ஒரு அறிக்கை கிடைத்தது, ஆனால் அவர் இந்த வழக்கில் சாட்சியாக அழைக்கப்படவில்லை,” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here