தன்னார்வ அறப்பணியின்போது மயங்கி விழுந்து நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரணம்

வெலிங்டன்:

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற தன்னார்வ தொண்டூழிய நிகழ்வின்போது, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் நேற்று (பிப்ரவரி 21) நிகழ்ந்தது.

பசிபிக் நாடுகளுக்குச் சுத்தமான குடிநீரைக் கொண்டு சேர்க்க இந்த நிதி திரட்டும் ஒரு நிகழ்வு நடைபெற்றது. அதில் 49 வயதான எஃபெசோ கொல்லின்ஸ் என்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்றார்.

குறித்த நிகழ்வின்போது அவர் மயங்கி விழுந்து மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கொல்லின்சுக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

கொல்லின்சின் மரணம் தமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுஸோன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here