கோத்தா கினாபாலு:
தற்போது சபாவில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சபா அணைகளில் நீர் இருப்பு மூன்று மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
சபா மாநில நீர்த் துறை (JAS ) நீர் வழங்கலை ரேஷன் முறையில் செயல்படுத்தும் என்றும் வறட்சி நிலைமைகள் மோசமடைந்தால் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அது முன்மொழியும் என்றும் சபாவின் துணை முதல்வர் III, டத்தோ ஷாஹெல்மே யாஹ்யா கூறினார்.
“தற்போது சபாவில் நிலவிவரும் நீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண JAS உடன் நான் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளேன்.
“இருப்பினும், நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டினால், செயற்கை மழை பொழிவிப்பு போன்ற மாற்று வழிகளை நாங்கள் அறிமுகப்படுத்தலாம்,” என்று அவர் நேற்று மாநில அளவிலான உலக சாரணர் தின கொண்டாட்டத்தைத் தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.









