இங்கிலாந்து லீக் கிண்ணத்தை வாகை சூடியது லிவர்புல்

வார இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் லிவர்புல் அணி வாகை சூடியது. இந்த இறுதி ஆட்டத்தில் அவ்வணி செல்சி அணியை எதிர்கொண்டு விளையாடியது.

வெம்பளி அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்புல் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் புகுத்த பல முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் அவை வெற்றி பெறவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் புகுத்த முயற்சிகளை மேற்கொண்டன. அதன் பலனாக ஆட்டம் முடிவடைவதற்கு 2 நிமிடங்கள் இருக்கும்போது வென் டைக் லிவர்புல் அணிக்கான  வெற்றி கோலைப்  புகுத்தி அரங்கை அதிரச் செய்தார்.

இரண்டு நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருந்தாலும் ஙெ்ல்சி அணியினர் கோல் புகுத்த முயற்சி செய்தனர். ஆனால் ஆட்டம்  லிவர்புல் அணிக்குச் சாதகமாக முடிவுற்றது.

லிவர்புல் அணியின் நிர்வாகி ஜோகர்ன் குளோப் இந்தத் தவணையோடு லிவர்புல் அணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் லிவர்புல் அணியினர் இந்தக் கிண்ணத்தை வென்றுள்ளது அதன் ரசிகர்களைப் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் லிவர்புல் அணி இந்தத் தவணையோடு சேர்த்து 10 முறை லீக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here