FIDE 2024 செஸ் போட்டியில் சாம்பியனான குகேஷ்

இந்தியா, சென்னையை சேர்ந்த 17 வயதான குகேஷ் தொம்மராஜு, FIDE 2024 செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் இந்த ஆண்டின் இறுதியில் 2024 உலக சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக தற்போதைய உலக சாம்பியனான டிங் லிரனுடன் அவர் மோதவிருக்கிறார்.

17 வயதில், கேண்டிடேட்ஸ் போட்டியில் வென்ற இளைய வீரர் மற்றும் வரலாற்றில் இளைய உலக சாம்பியன்ஷிப் விளையாட்டாளர் இவர் ஆவார்.  5 முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற GM விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் இரண்டாவது இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் இவர் ஆவார்.  குகேஷுக்கு வாழ்த்துகள்… உலகெங்கிலும் உள்ள இந்திய ரசிகர்கள் மற்றும் செஸ் ஆர்வலர்களுக்கு இது ஒரு கொண்டாட்ட தருணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here