இபிஎஃப் அல்லாதவர்களை அதிக ஈவுத்தொகையால் ஈர்க்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர் கருத்து

இபிஎஃப்பின் கீழ் வராத 40% பணியாளர்களில் சிலர், அதிக ஈவுத்தொகையை தொடர்ந்து அளித்தால், வருங்கால வைப்பு நிதியில் பங்களிப்பதை உறுதிசெய்ய முடியும் என்று ஒரு பொருளாதார நிபுணர் நம்புகிறார். மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அஸ்லாம் ஹனீப், உறுப்பினர் அல்லாதவர்களை பங்களிக்க ஊக்குவிப்பதற்காக EPF தொடர்ந்து அதிக வருமானம் மற்றும் நல்ல நிர்வாகத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார். பங்களிப்பாளர்கள் அல்லாதவர்கள் அதிக வருமானம் ஈட்டுவதில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார். இருப்பினும் தொழிலாளர்களுக்கு EPF “பாதுகாப்பான விருப்பம் என்று அவர் கூறினார். (நாம்) ஓய்வூதிய சேமிப்பின் மதிப்பை மக்களிடம் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் எப்ஃஎம்டியிடம் கூறினார்.

பல தொழிலாளர்கள் EPF க்கு பங்களிக்கவில்லை. ஏனெனில் அவர்களின் ஊதியம் சேமிக்க முடியாத அளவுக்கு குறைவாக உள்ளது. குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் என்றார் அவர். ஊழியர் சேம நிதியின் CEO Ahmad Zulkarnain Onn, மலேசியாவின் 17 மில்லியன் தொழிலாளர்களில் சுமார் 40% பேர் EPF-ன் கீழ் இல்லை என்றும், பெரும்பான்மையானவர்கள் தனிப்பட்ட பணியாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் உட்பட முறைசாரா துறை தொழிலாளர்கள் என்றும் கூறினார்.

EPF தரவுகளின்படி, குறைந்தபட்ச ஊதியமாக RM1,500 சம்பாதிக்கும் ஊழியர், 3% வருடாந்திர சம்பள உயர்வுடன், 55 வயதை அடையும் போது RM479,000 வரை சேமிக்க முடியும். EPF சமீபத்தில் வழக்கமான சேமிப்புகளுக்கு 5.5% மற்றும் ஷரியா கணக்குகளுக்கு 5.4% ஈவுத்தொகை விகிதத்தை அறிவித்தது. இது 2022 இல் முறையே 5.35% மற்றும் 4.75% ஐ விட அதிகமாகும்.

மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த சங்கரன் நம்பியார் கூறுகையில், சீரற்ற, பணி நியமனம் சார்ந்த வருமானம் கொண்ட முறைசாரா தொழிலாளர்கள் அதிக வருமானத்துடன் கூடிய குறுகிய கால முதலீடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்களின் வேலையின் சுழற்சி தன்மையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வேலை இல்லாத நேரங்களில் சேமிப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். இருப்பினும், கிரிப்டோகரன்சி மற்றும் வெளிநாட்டு நாணயம் போன்ற அதிக வருவாய் ஈட்டும் முதலீடுகள் ஒரு சூதாட்டம் மற்றும் நீண்ட காலத்திற்கு நம்பகத்தன்மையற்றவை என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here