புலம்பெயர்ந்தோரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தின்கீழ் பேராக்கிக் 350 பேர் பதிவு

ஈப்போ:

புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ், பேராக்கில் மொத்தம் 350 சட்டவிரோத குடியேறியகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் 244 ஆண்கள், 91 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் அசங்குவதாக மாநில குடிநுழைவுத் துறை (JIM) இயக்குநர் மியோர் ஹெஸ்புல்லாஹ் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்கள் இந்தோனேசியா, பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், மியன்மார், நேபாளம், இலங்கை, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

“இந்த நாட்டில் இருக்க செல்லுபடியாகும் கடவுச்சீட்டு எதுவும் இல்லாததற்காக அவர்கள் அனைவரும் பிரிவு 6(1)(c), மற்றும் பிரிவு 15(1)(c) குடிவரவு சட்டம் 1959/63 ஆகியவற்றின் கீழ் அதிக காலம் தங்கியதற்காக நடவடிக்கை (அபராதம்) எடுக்கப்பட்டுள்ளது,” என்று உள்துறை அமைச்சகத்தின் (KDN) வளாகத்தில் இடம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டத்துடன் (PRM) இணைந்து நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here