புத்ராஜெயா: வெள்ளிக்கிழமை (மார்ச் 15) தவாவுக்குச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH2664, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA) திரும்பியதை மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) உறுதிப்படுத்தியுள்ளது.
CAAM தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கேப்டன் நோரஸ்மான் மஹ்மூத்தை பெர்னாமா தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் (ATC) இருந்து CAAM அறிக்கையைப் பெற்றுள்ளது என்றார். எனக்கு ATC யிடமிருந்து ஒரு அறிக்கை கிடைத்தது. அந்த அறிக்கையில் ‘திரும்ப வேண்டும், மேலும் எந்த சம்பவமும் இல்லை’ என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் 48 மணி நேரத்திற்குள் விரிவான அறிக்கையை CAAM க்கு வழங்கும் என்று அவர் கூறினார். www.flightaware.com என்ற இணையதளத்தில் காட்டப்பட்ட தகவலின் அடிப்படையில், MH2664 விமானம் KLIA க்கு திரும்புவதற்கு முன் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாலை 5.07 மணிக்கு KLIA க்கு திரும்புவதற்கு முன்பு விமானம் பஹாங்கில் உள்ள வான்வெளியில் சுற்றியதாக கூறப்படுகிறது. இரவு 8.30 மணி நிலவரப்படி, இந்த சம்பவம் குறித்து MAS இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.









