உள்ளூர் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதத்திற்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் காரணம் அல்லர்: ஜம்ரி

உள்ளூர் பட்டதாரிகளின் வேலையின்மை விகிதத்திற்கு  திறமையான வெளிநாட்டு பணியாளர்கள் காரணம் அல்ல என்று உயர் கல்வி அமைச்சர் ஜம்ரி அப்துல் காதிர் கூறினார். பல மலேசியப் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் வழங்கப்படும் குறைந்த ஊதியம் ஆகியவை அடங்கும் என்றார் அவர்.

ஷாஹிதான் காசிம் (PN-Arau) க்கு எழுத்துப்பூர்வ பதிலுக்கு ஜம்ரி மேற்கண்ட பதிலை வழங்கினார். அவர் படிப்பை முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். பல்கலைக்கழக பட்டதாரிகள் உட்பட பல மலேசியர்களின் வேலையின்மை நிலைமை இருந்தபோதிலும், நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஊடுருவுவது அமைச்சகத்திற்குத் தெரியுமா என்றும் ஷாஹிதான் கேள்வி எழுப்பினார்.

2022 ஆய்வின் அடிப்படையில், 53,257 பொறியியல் பட்டதாரிகள் பணியமர்த்தப்பட்டதாகவும், 3,495 பேர் மட்டுமே வேலையில்லாமல் இருப்பதாகவும் ஜாம்ப்ரி கூறினார். 25 வயதிற்குட்பட்ட புதிய பட்டதாரிகள் வேலையில்லாதவர்களில் பெரும்பகுதியை உருவாக்கியுள்ளனர். இருப்பினும் அவர் புள்ளிவிவரங்கள் எதையும் வழங்கவில்லை. கடந்த ஆண்டு நவம்பரில், புள்ளியியல் துறை தனது அறிக்கையில்  திறன் தொடர்பான  பட்டதாரிகளின் எண்ணிக்கை 2022 இல் 7.9% அதிகரித்து 1.68 மில்லியனாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 1.55 மில்லியனாக இருந்தது.

ஜனவரி மாதம், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ், திறமைகள் பற்றாக்குறைக்கு மத்தியில் குறிப்பாக சில தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட துறைகளில், உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்களின் வெளிநாட்டு பட்டதாரிகளை மலேசியாவில் பணிபுரிய அனுமதிக்கும் திட்டத்தை அரசாங்கம் ஆலோசித்து வருவதாகக் கூறினார். இந்த முன்மொழிவு கியூபெக்ஸ் மற்றும் முன்னாள் அம்னோ தலைவர் இஷாம் ஜலீல் ஆகியோரால் விமர்சிக்கப்பட்டது. இது குறைந்த ஊதியத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உள்ளூர் பட்டதாரிகளிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here