விஷத்தன்மை கொண்ட அழகு சாதனப் பொருட்களுக்குத் தடை

புத்ராஜெயா:  விஷத்தன்மை கொண்ட மூன்று அழகுசாதனப் பொருட்களின் விற்பனைக்கு சுகாதார அமைச்சகம் தடை விதித்துள்ளது. தலைமை சுகாதார அமைச்சர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் ஒரு அறிக்கையில் Toner Treatment EWSB, which contains hydroquinone and tretinoin; N Glow EWSB, which contains hydroquinone, tretinoin and betamethasone 17-valerate; and Glory Cosmetics Face Cream, which has mercury இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பொருட்கள் சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்பதால், பாதரசம் அழகுசாதனப் பொருட்களில் தடைசெய்யப்பட்டுள்ளது. இது இளம் குழந்தைகள் அல்லது கருவின் மூளை வளர்ச்சியில் தலையிடலாம். பாதரசம் தோலில் தடிப்புகள், எரிச்சல் உள்ளிட்ட பிற மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

Hydroquinone, tretinoin மற்றும் betamethasone 17-valerate ஆகியவற்றைக் கொண்ட தயாரிப்புகள் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ராட்ஸி கூறினார். சுகாதார நிபுணர்களின் மேற்பார்வையின்றி இந்தப் பொருட்கள் அடங்கிய பொருட்களைப் பயன்படுத்தினால் தேவையற்ற பக்கவிளைவுகள் ஏற்படும்  என்றார்.

இதற்கிடையில், betamethasone 17-valerate முக தோலை மெல்லியதாகவும் எரிச்சல், முகப்பரு மற்றும் தோல் நிறமிகளுக்கு ஆளாக்கவும் மேலும் இரத்த ஓட்ட அமைப்பில் உறிஞ்சப்பட்டு, தீங்கு விளைவிக்கும். இந்த தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் 1984 ஐ மீறினால் உடனடியாக அவ்வாறு செய்வதை நிறுத்துமாறு ராட்ஸி வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here