கோலாலம்பூர்: ‘அல்லா’ என்ற வாசகத்தைத் தாங்கிய காலுறைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை போலீசார் முடித்துள்ளதாகவும், மேல் நடவடிக்கைகளுக்காக சட்டத்துறைத் தலைவரின் அறிவுறுத்தல்களுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
KK Supermart & Superstore Sdn Bhd (KK Super Mart) மற்றும் அதன் விற்பனையாளர், அதாவது ஜோகூரில் உள்ள ஸ்ரீ காடிங் தொழில் பூங்காவில் இயங்கி வரும் தொழிற்சாலை தொடர்பான விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைனி தெரிவித்தார்.
இதுவரை நாங்கள் 143 புகார்களை பெற்றுள்ளோம் மற்றும் 14 ஜோடி காலுறைகளை பறிமுதல் செய்துள்ளோம். அதே நேரத்தில் ஊழியர்கள் மற்றும் லோரி ஓட்டுநர்கள் உட்பட 174 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் அறிவுறுத்தல்களைப் பெற்றவுடன், அதற்கேற்ப புதுப்பிப்புகளை வழங்குவோம் என்று அவர் இன்று புக்கிட் அமானில் நடந்த சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
முகமட் ஷுஹைலி மேலும் கூறுகையில், சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் அல்லா என்ற வார்த்தையைக் கொண்ட காலுறைகளை விற்பது தொடர்பான மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளன.