85 ரிங்கிட் களவு கல்லூரி மாணவரின் கொலைக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது

கோத்த கினபாலு: “திருடப்பட்ட” RM85 தொடர்பான தகராறு வெள்ளிக்கிழமை (மார்ச் 22) சபாவின் கிழக்கு லஹாட் டத்து மாவட்டத்தில் உள்ள விடுதியில் 17 வயது தொழிற்கல்வி பள்ளி மாணவரின் மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இரண்டு மாணவர்களின் RM85 ஐத் திருடியதாகக் குற்றம் சாட்டிய பின்னர், அந்த இளைஞனை அவனது விடுதித் தோழர்கள் தாக்கியதாக நம்பப்படுகிறது.

லஹாட் டத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்  டாக்டர் ரோஹன் ஷா அஹ்மட், சனிக்கிழமை (மார்ச் 23) ஒரு அறிக்கையில், இதுவரை போலீஸ் விசாரணைகள் பாதிக்கப்பட்ட முகமது நமி அய்சாத் முகமட் நருல் அஸான் விடுதியில் இருந்த இரு வெவ்வேறு நபர்களிடம் இருந்து 35 ரிங்கிட்  மற்றும் 50 ரிங்கிட் திருடியதால் சந்தேக நபர்களால் தாக்கப்பட்டதாக காட்டுகின்றன.  பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி, அவரை அடித்து உதைத்ததால்   மாணவர் உயிரிழந்தார்.

கொலைக்கான விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும் 16 முதல் 19 வயதுக்குட்பட்ட 13 சந்தேக நபர்களுக்கு லஹாட் டத்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து ஆறு நாள் காவலில் வைக்க உத்தரவைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் சடலம் தொழிற்கல்வி பள்ளியில் உள்ள விடுதியில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து சந்தேக நபர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நான்கு விடுதி வார்டன்கள், பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சில கல்லூரி மாணவர்கள் உட்பட 12 சாட்சிகளிடமிருந்தும் நாங்கள் வாக்குமூலம் பெற்றுள்ளோம் என்று அவர் கூறினார்.

சந்தேக நபர்களின் 12 ஸ்மார்ட்போன்களையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் குறித்த முழு பிரேத பரிசோதனை அறிக்கைக்காக அவர்கள் இன்னும் காத்திருப்பதாகவும் கூறினார்.

சனிக்கிழமை முன்னதாக லஹாட் டத்து மருத்துவமனையின் தடயவியல் துறையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் வெளியே கூடினர். உயிரிழந்த  முகமது நஸ்மி கல்லூரியில் பயோ-டெக்னிக் கல்வியை படித்து வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here