இம்பேக்ட் விதி –  பேட்டிங்கை மேம்படுத்தியது: ஸ்டீபன் பிளமிங்

சென்னை, மார்ச் –

17ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது. ஒரு வீரர் 75 ரன்னை எடுக்கும் போது அணிக்கு உதவியாக இருக்கும். ருதுராஜ் கெய்க் வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும்.

தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் விதி அணியின் பேட்டிங்கை மேம்படுத்த உதவியது. அதை நாம் செயல்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here