ஹரிராயா கொண்டாடத்தை நிர்ணயிப்பதற்கு ஏப்ரல் 9ஆம் தேதி பிறை பார்க்கப்படும்

ஹரிராயா கொண்டாட்டதை நிர்ணயிப்பதற்கான  பிறை  செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) பார்க்கப்படும். ஆட்சியாளர்கள் மாநாட்டின் ஒப்புதலுடன் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் உத்தரவின் பேரில் ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளரின் அலுவலகம், சனிக்கிழமை (மார்ச் 30) ஒரு அறிக்கையில் rukyah (பிறை பார்ப்பது) மற்றும்  hisab ஆகியவற்றின்  (வானியல் கணக்கீடுகள்) அடிப்படையில்  ஹரிராயா தேதி தீர்மானிக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் மாநாடு ஒப்புக்கொண்டதாகக் கூறியது. ஆட்சியாளர்களின் முத்திரை காவலர் பிறை பார்க்கப்படும் அன்றிரவு வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் ஹரிராயா தேதியை அறிவிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here