வலுவான நீரோட்டத்தில் சிக்கிய குடும்பம்; ஒருவர் பலி- இருவர் மாயம்

செர்டாங்:

ங்குள்ள ஶ்ரீ கெம்பாங்கான், ஜாலான் கேபி 4/9 கோத்தா பெர்டானாவில் உள்ள கால்வாயில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் அடித்துச் செல்லப்பட்டனர்.

நேற்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில், தந்தை முதலில் தப்பித்ததுடன் போலீசாருக்கும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கும் தகவல் அளித்தார் என்று சிலாங்கூர் தீயணைப்பு துறையின் (செயற்பாடு) துணை இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் மொக்தார் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அந்த குடும்பத்தின் 9 வயதான இளைய மகனை பாதுகாப்பாக மீட்டனர்.

நேற்றிரவு 7.01 மணியளவில் அக்குடும்பத்தின் 10 வயது மூத்த மகன் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

“பாதிக்கப்பட்டவர் இறந்ததை அந்த இடத்தில் இருந்த சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது,” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தாயும் 4 வயது சிறுமியும் இன்னும் தேடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here