ஒரே பாலினத் திருமணத்திற்குஅனுமதி; தாய்லாந்து பரிசீலனை

பேங்காக்:

ரே பாலினத் திருமணங்களை அனுமதி வழங்குவது குறித்து தாய்லாந்து பரிசீலித்து வருகிறது.

இதுதொடர்பான மசோதா ஏப்ரல் 2ஆம் தேதியன்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா ஏற்கப்பட்டு சட்டமானால், ஒரே பாலினத் திருமணங்களுக்கு அனுமதி வழங்கும் முதல் தென்கிழக்காசிய நாடாக தாய்லாந்து திகழும் என்பதில் ஐயமில்லை.

இந்நிலையில், ஒரே பாலினத் திருமணங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டால் அத்தகைய தம்பதியருக்கு வாடகைத் தாய்ச் சேவை அனுமதிக்கப்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வாடகைத் தாய்ச் சேவை பெற வெளிநாட்டுத் தம்பதியருக்கு 2015லிருந்து நடப்பில் உள்ள தடையை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து தாய்லாந்து பரிசீலித்து வருகிறது.

தாய்லாந்தின் மருத்துவச் சுற்றுப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here