கோலலங்காட்   சிலம்பக் கழகத்தின்   பட்டயத் தேர்வு

 (எம்.எஸ்.மணியம்)

பந்திங், ஏப். 2-

கோலலங்காட் மாவட்ட சிலம்பக் கழகத்தின் சிலம்பப் பட்டயத் தேர்வு அதன் குழுமத்தின் ஏற்பாட்டில்   நடைபெற்றது. இத்தேர்வு கல்யாணசுந்தரம்  தலைமையில் நடைபெற்றதாக கோலலங்காட் மாவட்ட சிலம்பக் கழகத் தலைவர் ரெ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

400 மாணவர்களைக் கொண்ட கோலலங்காட் மாவட்ட சிலம்பக் கழகத்திலிருந்து16 கிளைகளைச் சேர்ந்த முதல் 99  மாணவர்கள் இத்தேர்வில் பங்கெடுத்ததாக அவர் கூறினார்.

 அதோடு கடந்த  மார்ச் 17ஆம் தேதி சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் கோலலங்காட் மாவட்ட சிலம்பக்கழகத்தின் 20ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில்  மீண்டும் போட்டியின்றி வெற்றி பெற்ற ஸ்ரீதரன் தேர்தலின்போது நாட்டின் துணைப் பிரதமரின் கல்விப் பிரிவின் அதிகாரி அரவிந்த் அப்பளசாமி சிறப்பு வருகை அளித்ததாகவும் மேலும் தெலுக் பங்ளிமா காரங் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரிர் ராஜசேகரன்  உடன் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் சிலம்பக் கழகத்தின் தோற்றுநர் மகாகுரு செல்வராஜுவுக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த ஆசிரியர்களான சுப்பிரமணியம், கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு கறுப்புப் பட்டய தரச் சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட அனைத்து சிலம்ப ஆசிரியர்களுக்கும் கறுப்பு பட்டய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டதாக ஸ்ரீதரன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here