ஐந்து மற்றும் 13 வயதுடைய வளர்ப்பு மகன்களை துன்புறுத்தியதாக தம்பதி கைது

கெனிங்காவ்: ஐந்து மற்றும் 13 வயதுடைய இரு ஆண் குழந்தைகளை துன்புறுத்தியதாக  திருமணமான தம்பதியை போலீசார் கைது செய்தனர். கெனிங்காவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் யாம்பில் அனக் கராய் கூறுகையில் 27 வயதான ஆணும், 36 வயதுடைய அவரது மனைவியும் நேற்று அவர்கள் வாடகை வீட்டில் கைது செய்யப்பட்டனர்.

பர்கர்களை விற்க தன்னை அணுகிய இரண்டு சிறுவர்களின் உடலில் காயங்கள் மற்றும் தீக்காயங்களைக் கவனித்த மற்றொரு 27 வயது இளைஞன் அளித்த புகாரைத் தொடர்ந்து தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். போலீஸ் விசாரணையில், இரண்டு குழந்தைகளிலும் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள்  காயங்கள் இருப்பது தெரியவந்தது.

13 வயது சிறுவன் சந்தேகத்திற்குரிய பெண்ணின் வளர்ப்பு மகன், அதே நேரத்தில் ஐந்து வயது குழந்தை இந்த தம்பதியரின் வளர்ப்பு மகன் என்று யாம்பில் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here